Rock Fort Times
Online News

திமுக – விசிக கூட்டணியில் குழப்பமா..?- திருச்சியில் தொல்.திருமாவளவன் பதில்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அரியலூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.அப்போது விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்ர் அதற்கு பதில் அளித்து பேசிய தொல்.திருமாவளவன்., திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன ? என்பது போன்ற யூகமான கேள்வி தற்போது கேட்கப்படுகிறது அப்படி ஒரு நிலை வந்தால் அது குறித்து கருத்து கூறுகிறேன். பாஜக, பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என ஒரு நிலையான நிலைப்பாடு எடுத்துள்ளோம். குறைந்த தொகுதி கொடுத்தாலும் திமுக கூட்டணியில் இருப்போம் எனக் கூறுவதால், எங்கள் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். ஏனென்றால் அவர்களை கொள்கை அடிப்படையில் செழுமைப்படுத்தி வைத்திருகிறோம். தொகுதி எண்ணிக்கை குறித்து எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. இனியும் வராது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தையின் போது பார்த்துக்கொள்வோம். இந்த முறை பேச்சுவார்த்தையின் போது நல்ல பலன் இருக்கும் என நம்புகிறோம். திமுக கூட்டணியை மட்டுமே குறிவைத்து பலர் கேள்வி எழுப்புகிறார்கள் . இது தேவையில்லாத ஒன்று என காரசாரமாக பதில் அளித்தார். அப்போது திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்