Rock Fort Times
Online News

காவலர்கள் குழந்தைகளுக்கு கல்வி தொகை உயர்வு!

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். காவல்துறை மானிய கோரிக்கை நேற்று சட்டசபையில் நடைபெற்றது. மானிய கோரிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
காவல்துறை காவலர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை மற்றும் பரிசுகள் வழங்குதல் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 100-லிருந்து 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் தற்போது 100 மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 4 வருடங்களுக்கு வழங்கப்படும்,  எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, 200 மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும். இது தவிர கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பரிசுத் தொகை இரட்டிப்பாக்கப்படும். இதற்கு கூடுதலாக தேவைப்படும் செலவினம் ரூபாய் 176.58 இலட்சம் ஆகும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்