திருச்சி கே.கே நகர் அன்பில் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது மனைவி சரோஜினி தேவி (வயது 49). இவர் நேற்று மாலை காய்கறி வாங்கிக் கொண்டு அந்த பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது , அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் சரோஜினி தேவியை வழிமறித்து அவர் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சி செய்தனர்.அப்பொழுது சரோஜினி தேவி நகையை பிடித்துக்கொண்டு சத்தம் போட்டதால் அவர்களால் நகையை பறிக்க முடியவில்லை. இதனையடுத்து மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து சரோஜினி தேவி ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை திருட முயற்சி செய்த இரண்டு மர்ம ஆசாமிகளை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
