Rock Fort Times
Online News

குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக டீ தூள் ஏஜென்டிடம் ரூ.1 லட்சத்து 84,000 ஆன்லைன் மோசடி!

திருச்சி துறையூர் பி.மேட்டூர் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 51). இவர் தனியார் டீ தூள் கம்பெனியின் ஏஜெண்டாக உள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் வந்தது. அதில் ஒரு சதவீத வட்டிக்கு தொழில் விருத்திக்கு லட்சக்கணக்கில் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது உடனே ஆரோக்கிய ராஜ் அந்தத் தகவல் அனுப்பிய நபரின் செல் போன் நம்பருக்கு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் ரூ.3 லட்சம் கடன் பெற வேண்டும் என்றால் பிராசசிங் கட்டணமாக ரூ.7,060 செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். உடனே அந்த நபர் கேட்டுக்கொண்டபடி அவரது வங்கி கணக்கு மேற்கண்ட தொகையை அனுப்பினார். மேலும் ஆதார் கார்டு, பான் கார்டு விபரங்களையும் அனுப்பி வைத்தார். பின்னர் சில தினங்கள் கழித்து  ஜி.எஸ்.டி. கட்டணம் என இன்னொரு தொகையை அந்த மர்ம நபர் பெற்றுள்ளார். அதன் பின்னர் உங்களது வீட்டுக்கு வந்து அலுவலர்கள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச் செல்வார்கள். அதற்கு முன்பணமாக ரூ. 28 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தத் தொகைகள் அனைத்தும் உங்களது கணக்கில் மீண்டும் செலுத்தப்படும் என தெரிவித்தார். இதனை நம்பிய ஆரோக்கியராஜ் மொத்தம் ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 500 தொகையை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் வாட்ஸப் மூலம் கடன் தொகைக்கான காசோலையை அனுப்பியுள்ளார். அந்தக் காசோலை வீட்டுக்கு வரும் என எதிர்பார்த்து இருந்த ஆரோக்கியசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது பற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டீத்தூள் ஏஜெண்டிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்