Rock Fort Times
Online News

மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு திருவிழா:- திருச்சியில் நடைபெற்ற விழாவில் 97 பேருக்கு பணி நியமன ஆணை…!

மத்திய அரசின் சார்பில் வேலைவாய்ப்பு திருவிழா நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளில் மத்திய அரசு பணிகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரையாற்றினார். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் பழங்குடியினர் நலத்துறை மத்திய இணை மந்திரி ஜுவல் ஓரம் கலந்து கொண்டு 97 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுங்கத்துறை தலைமை ஆணையர் விமலநாதன், முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், திருச்சி மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலாதேவி, இ.எஸ்.ஐ. துணை இயக்குனர் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் விஜயகிருஷ்ணா வரவேற்று பேசினார். முடிவில் கூடுதல் கமிஷனர் திலீபன் நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்