திருச்சி, அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமராஜ் நகர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் அரியமங்கலத்தை சேர்ந்த சண்முக பிரியன் ( வயது 20), ரியாஸ் அஹமத் (24), விஷால் கிருஷ்ணா (20), இப்ராஹிம் மூசா (21) மற்றும் ரவுடிகள் தீபக் (20), உதுமான் அலி (22) ஆகியோர் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து விற்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 போதை மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, எடதெருவில் பாய்கார சந்து பொது சுகாதார வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்ற அரியமங்கலத்தை சேர்ந்த அசார் முகமது (27) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.