ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் ரயில் மறியல் -போலீசுடன் தள்ளுமுள்ளு!
எம்பி திருநாவுக்கரசர் கைது!
ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் இன்று காங்கிரசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல்காந்தி எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழக முழுவதும் காங்கிரஸார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திருச்சியிலும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது.திருச்சி ஜங்ஷனில் நடந்தரெயில் மறியல் போராட்டத்திற்கு திருநாவுக்கரசர் எம்.பி தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர்கள் ஜவஹர், திருச்சி கலை, வக்கீல் கோவிந்தராஜன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தப் போராட்டத்தில் மாநிலச்செயலாளர்கள் வக்கீல் இளங்கோ, வக்கீல் சரவணன், ஜி.கே.முரளி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தொட்டியம் சரவணன், ஜெயப்பிரகாஷ், வக்கீல் சரவணன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் என்ஜினீயர் பேட்ரிக் ராஜ்குமார், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, கவுன்சிலர்கள் எல்.வி. ரெக்ஸ், சோபியா விமலா ராணி, பொருளாளர்கள் ராஜா நசீர், இளையராஜா, கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், பொதுச்செயலாளர் அர்ஜூன், பூக்கடை பன்னீர்செல்வம், சரவண சுந்தர், சிவா, எம்.பி. உதவியாளர் முத்துக்கிருஷ்ணன்,இளைஞர் காங்கிரஸ் ரமேஷ் சந்திரன், பீமநகர் காசிம், மலர் வெங்கடேசன், மீனவர் அணி மாவட்ட தலைவர் வக்கீல் தனபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஜி.மகேந்திரன்,உறையூர் எத்திராஜ், தென்னூர் மெய்யநாதன், பட்டேல், அரிசிக்கடை டேவிட், ஜெகதீஸ்வரி, அப்துல் குத்தூஸ், ஜாகீர் உசேன், முருகானந்தம், ஹெலன், அமிர்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். முதலில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் ஒன்று திரண்ட காங்கிரஸார், திருநாவுக்கரசர் எம்.பி தலைமையில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக திருச்சி ரயில் நிலையம் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு, ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட எம் பி திருநாவுக்கரசர் உட்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர் .இச்சம்பவத்தால் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

