Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, வையம்பட்டியில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, வையம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. துவரங்குறிச்சி மற்றும் வையம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் செவல்பட்டி, பழைய பாளையம், அக்கியம்பட்டி, பழைய பாளையம், ஆகிய இடங்களில் நாளை ( ஏப்.21 )திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், அதே போல அயன் ரெட்டியப்பட்டி, வையம்பட்டி, அஞ்சல் காரன்பட்டி, ஆவாரம்பட்டி, கேசலூர், தேக்கமலை, கோவில்பட்டி, குமாரவாடி மற்றும் வலையபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 3 மணி வரையிலும் மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்