Rock Fort Times
Online News

இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணம்

நாகை மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சாலை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலான இடங்களில் இருசக்கர வாகனத்தில் இருவர் பயணிப்பதை விட அதற்கு மேற்பட்ட நபர்கள் பயணிப்பதே வாடிக்கையாக உள்ளது. அதிலும் ஒரு படிமேலாக ஒரு இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் 5 பேரை ஏற்றிச்செல்லும் காட்சிகள் வெளியாகி காண்போரை அட்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாகை கிழக்கு கடற்கரைச் சாலையில் தற்பொழுது சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் சூழலிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட காட்சிகள் ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.இதுபோன்ற ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்களின் வாகனத்தை பறிமுதல் செய்வதோடு ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.

 

1 Comment
  1. mitolyn reviews says

    **mitolyn reviews**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்