திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு 4 பேரும், செயலாளர் பதவிக்கு 3 பேரும், துணைத்தலைவர் பதவிக்கு 4 பேரும், இணைச்செயலாளர் பதவிக்கு 3 பேரும், பொருளாளர் பதவிக்கு 4 பேரும் போட்டியிட்டனர். 1000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி தலைவராக எஸ்.பி.கணேசன், செயலாளராக சி.முத்துமாரி, பொருளாளராக சதீஷ்குமார், துணைத் தலைவராக வடிவேல் சாமி, இணைச் செயலாளராக விக்னேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.இந்திராகாந்தி, என்.சந்திரமோகன், எம். முகமதுசதாம், முத்துப்பால் , சிவா, மோனிகாமங்கலம், ராஜ்குமார், சேது மாதவன், தர்மேந்திரன், சியாம் சுந்தர், தியாகசுந்தரம், பாஸ்கர், சாய்நாதன், பாலசுப்ரமணி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சக வழக்கறிஞர்கள் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Comments are closed.