கோடை வெயிலில் தாக்கத்தால் பக்தர்கள் பாதிக்காதவாறு சுவாமி தரிசனம் செய்வதற்காக, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக கோயிலின் முக்கிய பிரகாரங்களில் தரை விரிப்புகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், கலந்த நீர் மோர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் குறையும் வரை இவை பக்தர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என கோயில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.