Rock Fort Times
Online News

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20 ஆம் தேதி கடைசி நாள்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஏப்ரல் 2023 தேர்வுக்கு, ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுப்பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பொறுப்பு தேர்வு நெறியாளர் எஸ். சீனிவாச ராகவன் தெரிவித்திருப்பது:
பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி பாரதிதாசன் பலல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதலின்படி 2018-2019 கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வியாண்டுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களில் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணாக்கர்கள் தங்களது படிப்பை முடித்துக் கொள்ள அளிக்கப்பட்டிருந்த ஐந்தாண்டு காலக்கெடு வருகிற ஜூன் 30.06.2023ல் முடிவடைகிறது. இது தொடர்பான தகவல் கல்லூரிகளுக்கும் மற்றும் பல்கலைக்கழக இணையதளத்திலும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலுவைத்தாள் (அரியர்) வைத்துள்ள, ஏப்ரல் 2023 தேர்வை எழுதும் மாணவ, மாணவியர் இதுநாள் வரை விண்ணப்பிக்காமல் இருந்தாலும், ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக தேர்வுப் பிரிவுக்கு தாங்கள் பயின்ற கல்லூரி வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை WWW.bdu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்