தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், மு. பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி சிவபதி, வளர்மதி, அமைப்பு செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்டம்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், ஜோதி வாணன், மாவட்ட பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி, அணி நிர்வாகிகள் இளைஞரணி ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி, பகுதி செயலாளர்கள் பூபதி, அன்பழகன், நாகநாதர் பாண்டி, கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் சில்வர் சதீஷ்குமார் டி.ஆர்.சுரேஷ் குமார்,கலைப்பிரிவு பொருளாளர் சாதிக் அலி, எனர்ஜி அப்துல் ரகுமான், பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன், கௌசல்யா, நிர்வாகிகள் காசிபாளையம் சுரேஷ்குமார், தியாகராஜன், வக்கீல் தினேஷ்பாபு, வசந்தம் செல்வமணி வசந்தகுமார், ரமணிலால் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சுபத்ராதேவி, ஜெயலலிதா பேரவை சூரியூர் ராஜா என்கிற ராஜ மணிகண்டன், எஸ்.பி பாண்டியன் ராவணன், அருண் நேரு, பொதுக்குழு சாந்தி மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட்ஜான், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், இளைஞர் அணி நிர்வாகிகள் தேவா, புங்கனூர் கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாகவதர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- தென்னிந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஏழிசை மன்னர் என்ற பெயர் பெற்ற மறைந்த திரைப்பட நடிகர் தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தை சட்டமன்றத்திலே அறிவித்து அவருக்கு முழு உருவ சிலை அமைத்து கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமி தான்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றியடைய கூடிய வலுவான கூட்டணியை வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் கட்டாயம் அமைப்பார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். இரண்டு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் உள்ள கட்சி அதிமுக. மும்மொழிக் கொள்கையில் யார் நாடகம் ஆடினாலும் சரி எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார் எடுத்திருக்கின்ற முடிவு, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எடுக்கின்ற முடிவு. இருமொழிக் கொள்கைதான் வேண்டும், அதற்கு தான் அதிமுக ஆதரவு கொடுக்கும். மூன்றாவது மொழி விருப்ப பாடத்தை படிக்கலாம், அதை திணிக்க கூடாது. அதிமுகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது. அதிமுகவில் இல்லாதவர்கள், 30 வருடங்களுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேறியவர்கள், வேறு கட்சியில் சேர்ந்தவர்கள் இரட்டை இலை எனக்கு வேண்டும், கட்சி எனக்கு வேண்டும் என்றால் யாரும் கொடுப்பதற்கு தயார் இல்லை. அதிமுகவும் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
கட்சியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் இணைந்துள்ளவர்கள் இனிமேல் கட்சியில் சேர வேண்டும் என கூறினால் எடப்பாடி யாரிடம் கடிதம் கொடுத்து அவர் விருப்பப்பட்டால் சேர்ப்பார்கள். இதுதான் கட்சியினுடைய நடைமுறை. திமுக தேர்தல் வாக்குறுதியில், நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்கள் செய்தார்களா?.
இதுபோல் நிறைய சொல்லலாம். மு.க.ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிக்கையில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், திருமண உதவித் தொகை திட்டம் லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். வீட்டு வரி, சொத்து வரி, குப்பை வரி என அதிகமான வரி விதித்திருக்கிறது. 9 லட்சம் கோடி என்ன செய்தார் என்று தெரியாமல் இருக்கிறது . இந்த ஆட்சி வேண்டுமா? என்பதே நாட்டு மக்கள் மத்தியில் பேச்சாக உள்ளது. கூடிய விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு போக போகிறது அதிமுக ஆட்சிக்கு வரப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.