சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சமூகத்தில் எதிர்ப்புகளை மீறி தங்களது சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கவுரவிக்கும் வகையில் முன்மாதிரி விருது, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது. திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ல் வழங்கப்படும் இவ்விருது பெற அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய, குறைந்தது 5 திருநங்கைகள் முன்னேற உதவிய வாரியத்தில் உறுப்பினராக இல்லாத திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், பயோ டேட்டா, பாஸ்போர்ட் போட்டோ 2, ஆட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலரின் பரிந்துரை கடிதம், ஏற்கனவே பெற்ற விருதுகளின் விபரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்) சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு ஆகியவற்றை தமிழில் தயார் செய்து தலா 2 நகல்கள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் பிப். 10ம் தேதி ஆகும். கூடுதல் விபரங்களுக்கு 0431- 2413796 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
Comments are closed.