பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஒருமோசடி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த லிங்கை கிளிக் செய்தால் மூன்று மாத ரீசார்ஜ் இலவசம். எனஇணைய லிங்குடன் கூடிய தகவல் பரவி வருகிறது. இது போன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸர் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரில் மக்களை ஏமிற்றும் விளம்பரங்கள் மூலமும் இணைய லிங்க் அனுப்பும் சைபர் கிரைம் குற்றவாளிகள், அந்த லிங்க் மூலம் உள்நுழையும்போது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடுகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய அரசு திட்டங்களை குறிப்பிட்டும் இதே போன்ற மோசடிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரிலும் ஒரு குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் புத்தாண்டு சலுகை என்ற தலைப்புடன் முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும் இரண்டு மாத ரீசார்ஜ் தொகையான ரூ. 749 முற்றிலும் இலவசமாக தருகிறார் என குறிப்பிட்டு ஒரு இணைய லிங்க் வழங்கப்படுகிறது. இதுபோன்ற லிங்கில் நுழைந்தால் அந்த மொபைல் என்னுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, இத்தகைய விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.இதுபோன்ற சைபர் கிரைம் பற்றிய புகார்கள் தெரிவிக்க 1930 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என சைபர் கிரைம் போலீஸர் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.