கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் பல பகுதிகளில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளின் பயன்பாடு மற்றும் விற்பனை படு பயங்கரமாக வளர்ந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு ஹை டெக் ஆக போதை மாத்திரை விற்பனை செய்வதை சமூக விரோத கும்பல் கனக்கச்சிதமாக அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில் திருச்சி – தஞ்சை சாலையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சிவராமன் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு இருந்த மூன்று இளைஞர்கள் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றனர். அதில் இருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் ஒருவர் தப்பி ஓடினார். போலீசில் பிடிபட்டவர்கள் தாராநல்லூரை சேர்ந்த சீனிவாசன்(23) உறையூரை சேர்ந்த தனக்கிட்டு(20) என்பது தெரியவந்தது. அவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக மாற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 80 மாத்திரைகள், இரண்டு ஊசிகள், இரண்டு செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நசுருதீனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Prev Post
Comments are closed.