Rock Fort Times
Online News

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வருகை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை !

தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை திருச்சிக்கு வருகை தருகிறார். இதையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்சியினருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது., திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளைய தினம் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை திருச்சிக்கு வருகை தர உள்ளார். அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் எனது தலைமையில் சிறப்பான வரவேற்பு வழங்கபட உள்ளது. இந்த நிகழ்வில் மாநில – மாவட்ட – மாநகர, நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர் – நிர்வாகிகள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்