Rock Fort Times
Online News

சேறும்- சகதியுமாக காட்சியளிக்கும் சாலையில் பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம்,  கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட  ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தரமற்று போடப்பட்ட தார்ச் சாலை முற்றிலுமாக பெயர்ந்து விட்டது. தற்போது தொடர் மழை பெய்ததன் காரணமாக சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்தும், சாலையை சீரமைத்து தர கோரி யும் சேறும்- சகதியுமாக உள்ள சாலையில் பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், இந்த சாலை வழியாக செல்லவே முடியவில்லை. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. இன்னும் ஒரு வாரத்தில் புதிய தார்ச் சாலை அமைக்கப்படாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்