Rock Fort Times
Online News

திருச்சி ,கோட்டை பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு…!

திருச்சி, மலைக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ராஜ். இவரது மனைவி ஜீவா ஆண்டனி (46). இவர் வடக்கு ஆண்டாள் வீதி வழியாக அங்குள்ள தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், ஜீவா ஆண்டனி அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். இதுகுறித்து ஜீவா ஆண்டனி அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்