Rock Fort Times
Online News

திருச்சி, மலைக்கோட்டை கோவிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்!

திருச்சியின் பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் முக்கியமானது மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில். இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தாயுமான சுவாமியை தரிசித்து வருகின்றனர். திருச்சி மாநகர திருக்கோவில்களின் பெட்டகம் என்று  அழைக்கப்படும் இக் கோவிலில் கடந்த பல வருடங்களாக அறங்காவலர் குழு அமைக்கப்படாமல் இருந்தது.  இதனால் கோவில் மேம்பாட்டு மற்றும் நிர்வாகப் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலுக்கு 5 பேர் கொண்ட அறங்காவலர்களை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.  இக்குழுவில், திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெருவை சேர்ந்த பா.சீனிவாசன், திருச்சி, தாராநல்லூர் அலங்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மு.கருணாநிதி, மலைக்கோட்டை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தெருவை சேர்ந்த ரா.கலைச்செல்வி, திருச்சி, எடத்தெரு, கீழ நெய்க்கார தெருவை சேர்ந்த வி.ஸ்ரீதர்,காட்டூர் காவிரி நகரை சேர்ந்த மு.கோவிந்தராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நாளைய தினம் பதவியேற்கவுள்ள இந்த 5 அறங்காவல்குழு உறுப்பினர்கள்,தங்களுக்குள் அறங்காவல் குழுத்தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்