Rock Fort Times
Online News

கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த வழக்கில் பேராசிரியர் கைது- மற்றொருவருக்கு வலை…!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் சேவியர்ஸ் கல்லூரியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.  இங்கு பணியாற்றிய  2 பேராசிரியர்கள், செல்போன் மூலம் மாணவி ஒருவரை தொடர்பு கொண்டு மது அருந்த அழைத்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆபாசமாக பேசியதாகவும் தகவல் வெளியானது.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் மற்றும் உளவுத்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பால்ராஜ் மற்றும் செபஸ்டின் ஆகிய 2 பேராசிரியர்கள் மீது பெண்களின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர்.  இந்தநிலையில் பேராசிரியர் செபஸ்டின் கைது செய்யப்பட்டுள்ளார்.மற்றொரு பேராசிரியர் பால்ராஜை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக 2 பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்