திருச்சி, பொன்மலை ஜி கார்னர் அருகே ரவுடிகள் கூட்டமாக நின்று அப்பகுதியை ரகசியமாக நோட்டமிட்டு வருவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் ரவுடி கூட்டம் நாலாப்புறமும் சிதறி ஓடியது. இதுகுறித்து அப்பகுதியில் விசாரித்த போலீசார், மேல கல்கண்டார் கோட்டை தெய்வீகன் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சரவணகுமார் என்பவரை கைது செய்து, அவர் வைத்திருந்த 2 பட்டா கத்திகள், 1 செல்போன் மற்றும் வைஃபை மோடம் ஆகியவற்றை பரிமுதல் செய்தனர்.மேலும், தப்பியோடிய கமலக்கண்ணன், வினோத், ராஜவேல், அலெக்சாண்டர், சரத் என்கிற ரத்தினசாமி,மாதவன் மற்றும் ஹரி சுதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Comments are closed.