Rock Fort Times
Online News

ரூ.380 கோடியில் கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு …!

திருச்சி மாநகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு  திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் ரூ.380 கோடியில் ஒருங்கிணைந்த  பேருந்து  நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தை சுற்றி மொத்த மார்க்கெட் மற்றும் பல்வேறு கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தநிலையில் பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.  இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்  உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்