Rock Fort Times
Online News

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் திருச்சி அருகே விஏஓ கைது!

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா சிறு விவசாயி. இவரது தந்தை பெயரில் உள்ள 29 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய  அந்தப் பகுதி விஏஓ பழனியம்மாளை  நாடினாா். ஆனால் அவர் அகிலாவிடம் 5 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக கொடுத்தால் செய்து தருவதாக உறுதி அளித்தார் பணம் கொடுக்க விரும்பாத அகிலா இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் ஐந்தாயிரம் ரூபாயை பழனியம்மாளிடம் அகிலா கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். VA0 பழனியம்மாளை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கைது செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்