திருவெறும்பூர் அருகே மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்த போது தவறி விழுந்த கேங்மேன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மணப்பாறை பொன்னம்பலம்பட்டியை சேர்ந்தவர் மாதவன் இவரது மகன் வடிவேல்( 34 ) இவர் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் துணை மின் நிலையத்தில் கேங்மேனாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்துவந்தார். நேற்று காட்டூர் விவேக் நகர் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்தபோது மின்கம்பத்திலிருந்து தவறி கீழே விழுந்தார்,. இதில் வடிவேல் பலத்த காயமடைந்தார். அவரை சக ஊழியர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வடிவேல் பரிதாபமாக உயரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
