திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஜங்ஷன், இ.பி.ரோடு, சத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் இல்லத்தில் மாண்புமிகு மேயர் அன்பழகன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள முதியோர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு, வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் போன்ற வசதிகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மண்டலத்தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன் லோகநாதன், மாமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி, பிரபாகரன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள் சண்முகம் ரவி ,அக்பர் அலி மற்றும் பலர் உடன் இருந்தனர்
