அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடிநீர் விநியோகம்முறையாக தொடர்ந்து 24 மணி நேரமும் கிடைக்கும் என்ற நிலையினைஅடைந்திட பரீட்சார்த்த முறையில் திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி,திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர்,கடலூர், தாம்பரம், ஈரோடு மற்றும் நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளிலும் காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் இராஜபாளையம் ஆகிய நகராட்சிகளிலும் சுமார் 5,000 முதல் வரையிலான குடிநீர் இணைப்புகள் மூலம் 24 X 7 குடிநீர் திட்டம் ரூ.420 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படும். செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் (BioCNG) அமைத்தல். மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில் மற்றும் தாம்பரம் ஆகிய 9 மாநகராட்சிகளில், உயிரி எரிவாயு தயாரிக்க, பொது-தனியார் பங்களிப்புடன் தினமும் 930 MT திறன் கொண்ட புதிய Bio CNG ஆலைகள் அமைக்கப்படும். கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாநகராட்சிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை செயலாக்கும் ஆலைகள் (Construction and Demolition Waste) கோடி மதிப்பீட்டில் ரூ.22.50 அமைக்கப்படும். முழு தானியங்கி வளமீட்பு மையங்கள் அமைத்தல்! மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளில் தினமும் 1,300 MT உலர் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் வகையில் முழு பிரித்து தானியங்கி வளமீட்பு மையங்கள் (Automated Material Recovery Facilities) அமைக்கப்படும். பேருந்து நிலையங்கள் திண்டுக்கல், நாகர்கோவில், திருச்சிராப்பள்ளி (ஸ்ரீரங்கம் பகுதியில்) ஆகிய 3 மாநகராட்சிகள், நாகப்பட்டினம், மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், கொமாரபாளையம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருவாரூர், உளுந்தூர்பேட்டை மற்றும் பத்மனாபபுரம் ஆகிய 9 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் ரூ.174 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.பேருந்து நிலையங்கள் மேம்படுத்துதல் மேட்டுப்பாளையம், பெரம்பலூர், சீர்காழி, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, காயல்பட்டினம், குழித்துறை, இராசிபுரம், செங்கோட்டை, மதுராந்தகம், திருவத்திபுரம் மற்றும் குன்னூர் ஆகிய 12 நகராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் ரூ.42.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.இவை அனைத்தும்நேற்று சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கையில் அமைச்சர் நேரு திருச்சி உள்ளடக்கிய திட்டங்கள் குறித்து கூறினாா்.
