Rock Fort Times
Online News

திருச்சி, திறுவெறும்பூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி, திருவெறும்பூர் ஜெய் நகரில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின் சாந்தி வயது (35). இருவருக்கும் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  இந்த நிலையில் அவரது கணவர் பாலசுப்பிரமணியன், வேலைக்கு சென்றுள்ளார். இரு மகன்களும் பள்ளிக்கு சென்றுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த ஜாஸ்மின் சாந்தி,வீட்டின் குளியல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இரண்டு மகன்களும் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.  நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், வீட்டின் கீழே குடியிருக்கும் தனது தாத்தா பாட்டியிடம் கூறியுள்ளனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஜாஸ்மின் சாந்தி தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஜாஸ்மின் சாந்தி கடந்த 6 மாதமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்