கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தண்டவாளங்களில் நிலச்சரிவும், வெள்ள நீரும் தேங்கி உள்ளதால் பல இடங்களில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட வள்ளத்தோள் நகர்-வடக்கஞ்சேரி ரயில் நிலையத்துக்கு இடையே தண்டவாளம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் 20 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் ரயில் எண்: 16791 பாலருவி விரைவு ரயில், திருநெல்வேலி சந்திப்பில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட இந்த ரயில், பாலக்காடு செல்ல வேண்டிய அலுவா ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. அலுவா – பாலக்காடு இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண்: 16792 பாலருவி விரைவு ரயில்
பாலக்காடு சந்திப்பில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று புறப்பட வேண்டிய ரயில், அலுவா ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.05 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண்: 16649 பரசுராம் விரைவு ரயில் மங்களூரு சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இன்று புறப்பட்ட விரைவு ரயில், சொரனூர் சந்திப்புடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொரனூர் கன்னியாகுமரி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்: 16650 பரசுராம் விரைவு ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜூலை 31 புறப்பட வேண்டிய பரசுராம் ரயில், சொரனூர் சந்திப்பில் இருந்து நாளை பிற்பகல் 2.05 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 953
Comments are closed.