Rock Fort Times
Online News

அரண்மனையை மிஞ்சும் பிரம்மாண்டம்- திருச்சி, வயலூரை திருவிழாவாக்கிய ராயல் மஹால் திறப்பு விழா…!

திருச்சி மாவட்டத்தில் இந்து முறைப்படி திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்புபவர்கள், சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் வயலூர் முருகன் கோவிலில்தான் சுபகாரியங்களை செய்வார்கள். இறையருளுடன் இல்வாழ்க்கையை தொடங்கினால் குடும்பத்தில் சகல ஐஸ்வர்யமும் பெருகி நிம்மதி நிலைக்கும் என்பதால் முகூர்த்த நாட்களில் இவ்விரு இடங்களிலும் திருமண மண்டபங்கள் அனைத்தும் நூறு சதவிகிதம் புக்கிங் ஆகிவிடும். திருச்சி, வயலூரில் 30க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருந்தாலும், கார் பார்க்கிங் வசதி குறைவாக இருப்பதால் தனது மகளுக்கோ, மகனுக்கோ பிரம்மாண்டமாக திருமணம் நடத்துபவர்கள் வயலூரை தேர்வு செய்வதில் குழம்புவார்கள். இனி அந்த குழப்பமோ, கவலையோ தேவையில்லை. வயலூரில், சுமார் 1000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் வசதியுடன் அரண்மனையை மிஞ்சும் பிரம்மாண்டத்துடன், சகல வசதிகள் கொண்ட தி ராயல் மஹால் மற்றும் 300 பேர் அமரும் வகையில் ராயல் கேலக்ஸி மஹால் ஆகிய இரு திருமண மண்டபங்கள் இன்று(07-07-2024) உதயமாகியுள்ளது. கல்யாண மாலை புகழ் டி.வி.மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய திருமண மண்டபங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை இதன் நிர்வாக பங்குதாரர்களான என். வீரராகவ பெருமாள், எஸ்.சரவணபாண்டியன், எம்.முகமது ஹனீஃப், பி.கிரிதரன் ஆகியோர் வரவேற்றனர்.

இவ்விழாவில் தொழிலதிபர்கள், அரசு துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏசி வசதி கொண்ட தி ராயல் மஹாலில், 1000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமான அரங்கம், 250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் வசதியுடன் முதல் தரம் வாய்ந்த டைனிங் ஹால், 100 கார்களை நிறுத்தும் அளவுக்கு விசாலமான பார்க்கிங் வசதி, லிப்ட் வசதி, சமையலுக்கு பயன்படுத்த உயர்தர ஆர்.ஓ.குடிநீர் வசதி, 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களுடன் பாதுகாப்பு வசதிகள், வெளி அரங்கில் உணவு பரிமாறும் வசதி, ஏசியை பயன்படுத்த தனி ஜெனரேட்டர், மின் தடைக்கு பயன்படுத்த தனி ஜெனரேட்டர், உயர்தர உள்கட்டமைப்புடன் கூடிய ஆடியோ வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. 300 பேர் அமரும் வசதி கொண்ட ராயல் கேலக்ஸி மஹாலில், 100 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் முதல் தரம் வாய்ந்த டைனிங் ஹால், 20 கார்களை நிறுத்த பிரத்தியேக பார்க்கிங் வசதி ஆகியவையும் கட்டமைக்கப்பட்டுள்ளன. திறப்பு விழா சலுகையாக முதலில் புக்கிங் செய்யப்படும் நூறு புக்கிங்களுக்கு 50 சதவீத மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த மேலும் தகவல்களை பெற விரும்பினால் இதுதான் திருச்சி வயலூர் தி ராயல் மஹால் மேனேஜரின் செல்போன் எண் : 99626 77660

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்