சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – நாகா்கோவில் இடையே வாரம் 4 நாட்கள்(வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழைகளில்) இயங்கும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண்: 06067), சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு அதேநாள் பிற்பகல் 1.50-க்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.
மறுவழித்தடத்தில் ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழைகளில்) ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20-க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (எண்: 06068) அதேநாள் இரவு 11 மணிக்கு சென்னையை சென்றடையும். இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 956
Next Post
Comments are closed.