மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் திருச்சியில் ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து இன்று(02-07-2024)
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஜாக் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில், திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுகுமார், துணைத்தலைவர் மதியழகன், இணைச் செயலாளர்கள் சந்தோஷ்குமார், அப்துல்கலாம், பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், முத்துமாரி, தினேஷ், சரவணன், மூத்த வக்கீல்கள் வீரமணி, முத்துகிருஷ்ணன், ஓம் பிரகாஷ், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முல்லை சுரேஷ், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு, செயற்குழு உறுப்பினர் பொன் முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். நாளை மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டமும், வருகிற 8ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments are closed.