தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் செயல்பாட்டிற்கு வரவிருப்பதை முன்னிட்டு இன்று (10-06-2024)நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறுகையில், ஆகஸ்ட் மாதம் 15 -ந் தேதிக்குள்ளாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணி நிறைவடையும். அதற்காக ஒப்பந்ததாரர்களுடன், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து பேச உள்ளனர். பணிகள் முடிவதை பொறுத்து திறப்பு விழா தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழித்தடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். முன்னதாக, திருச்சி பீமநகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் பணியினையும், வங்கி கணக்கு, அஞ்சல் கணக்கு தொடங்குவதற்கான பணியினையும் தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, நகர பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி மற்றும் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், நாகராஜன், கமால் முஸ்தபா, முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, வட்டச் செயலாளர் புத்தூர் பவுல்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.