திருச்சி மாவட்டம், அழுந்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூரக்குடிபட்டி தென்றல் நகர் பகுதியில் கஞ்சா போதையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து ரகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டதும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டதால் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனை அறிந்த மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் தரப்பில், இதுபோன்று அடிக்கடி கஞ்சா போதையில் இளைஞர்கள் வந்து வம்பு செய்வதும், வழிப்பறி செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதனால், எங்களால் நிம்மதியாக குடி இருக்க முடியவில்லை. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments are closed.