Rock Fort Times
Online News

திருச்சி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி அ.ம.மு.க. வேட்பாளரை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர் கட்சி…!

தமிழகத்தில் உள்ள  39 நாடாளுமன்ற தொகுதிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று திருச்சி. காரணம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிட்டது தான்.  அவருக்கு மதிமுகவின் பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. இதனால், அவர் எந்த சின்னத்தில் நிற்பது என்பது தெரியாமல் தேர்தல் பிரச்சாரம் செய்தார். கடைசி நேரத்தில் அவருக்கு தேர்தல் ஆணையம் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கியது. வாக்குப்பதிவுக்கு குறைந்த நாட்களே இருந்த நிலையில் தீப்பெட்டி சின்னத்தை மக்களிடத்தில் வெகுவாக கொண்டு சென்றார். அவருக்கு தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பக்க பலமாக இருந்தனர்.  இதனால், தீப்பெட்டி சின்னம் வாக்காளர்கள் மத்தியில் நன்றாக  ‘ ரீச்’ ஆனது.  இந்நிலையில், இன்று(04-06-2024) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.  இதில், முதல் சுற்று முதலே தொடர்ந்து துரை வைகோ முன்னிலை பெற்று வருகிறார்.  இரண்டாவது இடத்தை அதிமுக வேட்பாளர் கருப்பையா பெற்று வருகிறார்.  ஆனால்,  பாஜக கூட்டணி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன் நான்காவது இடத்தையே பிடித்து வருகிறார்.  மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜேஷ் பெற்றுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மக்களவை தொகுதி நான்காவது சுற்று நிலவரம் வருமாறு:-

திமுக கூட்டணி  துரை வைகோ (மதிமுக) :- 101935

 கருப்பையா (அதிமுக) :- 47134

ராஜேஷ் (நாதக) :- -26255

செந்தில்நாதன் பாஜக கூட்டணி (அமமுக  ):- 18849

 

ஐந்தாவது சுற்று  நிலவரம்

துரை வைகோ திமுக கூட்டணி (மதிமுக ) :- 128447

கருப்பையா (அதிமுக) :- 59249

ராஜேஷ் (நாதக):- -26950

செந்தில் நாதன் பாஜக கூட்டணி (அமமுக ):- 24788

 

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்