திருச்சியில் பெய்த கனமழையால் சாலையின் நடுவே விழுந்த டிரான்ஸ்பார்மர் – நீண்ட நேரம் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி…!
திருச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் மாலை வேளைகளில் மழை வெளுத்து வாங்குகிற து. இந்தநிலையில் நேற்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. மாலை 5 மணியளவில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மேலப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக விமான நிலைய பகுதியில் 129 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் திருச்சி கே.கே.நகர் பகுதிக்கு உட்பட்ட சிற்பி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் மழையின் காரணமாக சாலையின் நடுவே சரிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உடனடியாக பியூஸ் போனதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின் வாரியத்திற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை முற்றிலுமாக நிறுத்தி னர். தற்போது வரை டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்படாதால் மின்சாரம் இன்றி அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Comments are closed.