திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42)இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார். அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். கடன் வாங்கிஆன்லைன் ரம்மி ஆடினார்.கடன் அளவுக்கு அதிகமானதால் 2நாட்களாக வேலைக்கு செல்லவில்லையாம் இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை ரவிசங்கர் மனைவி ராஜலட்சுமி ரவிசங்கரை எழுப்பிய பொழுது அவர் எழுந்திருக்கவில்லை அதனை தொடர்ந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு ரவிசங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் சம்பவம் குறித்து ராஜ லட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரித்து வருகின்றனர்
இறந்து போன ரவிசங்கருக்கு சாய்வர்சன் என்ற 6 வயது மகன் உள்ளான்
1 Comment
Leave A Reply

**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.