தமிழ்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். அதற்கான தேர்வு முடிவுகள் இன்று(14-05-2024) வெளியானது. www.tnresult.nic.in www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய வர்களில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 (91.17%) பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவிகள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 பேர் (94.69%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேர் (87.26%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 7.43% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச்- 2023-ம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,76,844. தேர்ச்சி பெற்றோர் 7,06,413. தேர்ச்சி சதவிகிதம் 90.93%. தமிழகத்தில் உள்ள மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,534. இதில், 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 1,964. 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 241. அரசுப் பள்ளிகள் 85.75%, அரசு உதவிபெறும் பள்ளிகள் 92.36%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.09% இருபாலர் பள்ளிகள் 91.61% பெண்கள் பள்ளிகள் 94.46% ஆண்கள் பள்ளிகள் 81.37% தேர்ச்சியை பெற்றுள்ளன.
பிளஸ்-1 தேர்வில்
கோவை 96.02%
ஈரோடு 95.56%
திருப்பூர் 95.23%
விருதுநகர் 95.06%
அரியலூர் 94.96%
சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

Comments are closed.