திருச்சி மாவட்ட கணினி சாா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் “ரெட் பிக்ஸ்” யூடியூப் செய்தி ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆஜர்…!
தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை தவறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததை தொடர்ந்து 10ம்தேதி இரவு டெல்லியில் திருச்சி எஸ்.பி தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவரை ரயில் மூலம் சென்னை அழைத்து வந்த போலீசார் அங்கிருந்து வேன் மூலம் திருச்சி அழைத்து வந்து சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட கணினி சாா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜர் படுத்தினர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயசுதா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரது உத்தரவின் பேரில், பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments are closed.