திருச்சி, காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் ரோடு சந்திப்பு பகுதியில் சொகுசு கார் ஒன்றில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து இரண்டு வாகனங்களையும் பிடித்து சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாக ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து பணம் ,கார், இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக உறையூர் சேர்ந்த ஜெயச்சந்திரன், வயலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் ராஜா, மற்றும் ராஜஸ்தான் சிறுவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவேஷ் குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Comments are closed.