Rock Fort Times
Online News

கேஸ் ரெகுலேட்டரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் தங்கம் பறிமுதல்…!

மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.  அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது ஒரு பயணி கேஸ் ரெகுலேட்டரில் மறைத்து கடத்தி வந்த 198 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அவற்றின் மதிப்பு  ரூ.14 லட்சம் இருக்கும் என அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார். அந்தப் பயணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்