திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 27). இவர் செல்போன் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணின் பெற்றோர் விஸ்வ நாதனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த விஸ்வநாதன் வீட்டின் அருகில் உள்ள தென்னூர் மீனாட்சி அம்மன் தோப்பில் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தில்லைநகர் போலீசார், விஸ்வநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.