திருச்சி பொன்மலை பகுதி திமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல்…!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்...
திருச்சி சுப்ரமணியபுரத்தில் பொன்மலை பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து பொதுமக்களுக்கு
நீர் மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், நிர்வாகிகள் கே.என்.சேகரன், செந்தில், செங்குட்டுவன், பகுதி செயலாளர்கள் நீலமேகம், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.