Rock Fort Times
Online News

மழைவேண்டி திருச்சியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை…!

தமிழகத்தில் எப்போதும் இல்லாதவகையில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதுடன் 13 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.
மேலும், பருவமழை பொய்த்துவிட்டதாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது, திருச்சியிலுள்ள ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகவே, மழை பெய்ய வேண்டி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் திருச்சி பாலக்கரை பிரபாத் திடலில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் முஹம்மது ரூருல் ஹக் ரஷாதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட உலமாக்கள், ஆலிம்கள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்