Rock Fort Times
Online News

உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா கோலாகலம்…

மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வரால் பாடல் பெற்ற இத்தலமாகவும் விளங்குகிறது. மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே உத்தமர் கோயில் ஒன்றே ஆகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15 ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து திருவீதி உலா வந்தார்.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டமானது இன்று காலை நடைபெற்றது. அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து,திருத்தேரில் 7 மணியளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். அதனைத்தொடர்ந்து காலை 8:15 மணியளவில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா!! என முழக்கத்தோடு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து கோயிலை சுற்றி வலம் வந்தனர். தேரோட்டத்தில் பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி ரகுபதி ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணகுமார், சாந்தி மற்றும் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்