Rock Fort Times
Online News

திருச்சி அருகே கஞ்சா போதையில் காரை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்- ஆட்டோவில் வந்தவர் மீது சரமாரி தாக்குதல்…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாளக்குடியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி ( வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.இவர் நேற்று இரவு திருவானைக்காவல் நரியன் தெருவில் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கஞ்சா போதையில் கையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு அந்த வழியாக வருவோர் போவோரை மிரட்டியுள்ளனர். மேலும், மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான காரை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்றை வழிமறித்து அதில் பயணம் செய்த சிவக்குமார், அவரது மனைவி லதா, மகன் மணிகண்டன் ஆகியோரை தாக்கியதில் சிவகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வரவே மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில், ரவுடி கும்பல் மூவரையும் ஸ்ரீரங்கம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்