தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை…!
மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 13) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று முதல் வருகிற ஏப்ரல் 15ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தென் கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.