தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்காக இன்னும் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்…!
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பெரியகுளத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய பிரேமலதா, “ விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை. தெய்வமாக இருந்து வழிநடத்தி கொண்டிருக்கிறார். அவர் சொந்த சம்பாத்தியத்தில் அன்னதானம் செய்தார். இப்போது வரை அவரது நினைவிடத்தில் தொடர்ச்சியாக அன்னதானம் கொடுக்கிறோம். கணவனை இழந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பது தாய்குலங்களுக்கு தெரியும். அவரின் இழப்பை மனதில் வைத்துக்கொண்டு துக்கம், வேதனையோடு கூட்டணி தர்மத்திற்காக 40 தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறேன். கடந்த 2011-ல் விஜயகாந்தும், ஜெயலிலதாவும் கூட்டணி அமைத்து எப்படி மாபெரும் வெற்றி பெற்றார்களோ அதுபோல ஜெயலிலதா இல்லாமல் எடப்பாடி பழனிசாமியும், விஜயகாந்த் இல்லாமல் நானும் சந்திக்கும் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும். விஜய பிரபாகரனுக்காக ஒரு நாள்கூட பிரசாரம் செல்லவில்லை. எல்லோரும் ஏன் மகனுக்காக பிரசாரம் செல்லவில்லை எனக் கேட்கிறார்கள். விஜயபிரபாகரன் மட்டும் என் மகன் அல்ல. 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் என் சகோதர சகோதரிகள்தான், என் பிள்ளைகள் மாதிரிதான். உங்கள் அண்ணியாக இல்லாமல் அன்னையாக இருக்கிறேன். தமிழகம் முழுவதும் களத்துக்குச் சென்று பார்த்து விட்டேன் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.