ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். திருச்சி ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.தமுமுக சார்பில் மரக்கடை சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியிலும், எஸ்டிபிஐ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கங்கள் சார்பில் தென்னூர், பாலக்கரை, காஜாமலை, ஏர்போர்ட், அரியமங்கலம் உள்ளிட்ட திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.