Rock Fort Times
Online News

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை: பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்…!

தமிழகத்தில் உள்ள  39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும், பாஜக தலைமையில் இன்னொரு அணியும் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது.  பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர்.  இந்நிலையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  தமிழகத்தில்  2 நாட்கள் பிரச்சாரம்  மேற்கொள்கிறார்.  அப்போது அவர் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

அதன்படி, ஏப்.12-ம் தேதி மாலை 3.05 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அமித்ஷா, ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை செல்கிறார். அங்கு ரோடு ஷோ மூலம் பிரச்சாரம்  மேற்கொள்கிறார். மாலை 5.40 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா, ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர், மதுரையில் இரவு தங்குகிறார். ஏப்.13-ல் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து வாகனம் மூலம் கன்னியாகுமரி செல்லும் அவர், ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர், ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்லும் அமித்ஷா, மதியம் 3 மணிக்கு திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பொதுக்கூட்டம் முடிந்து, திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அவர், அங்கு ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்கிறார். இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்